Saturday, 29 December 2018

தா. கி. பட்டம்மாள் (D. K. Pattammal)

தா. கி. பட்டம்மாள்



பிறப்பு:  மார்ச் மாதம் 19 , 1919

இடம்:காஞ்சிபுரம் , தமிழ்நாடு (இந்தியா)
பணி: கர்நாடக இசைப் பாடகி 
இறப்பு: ஜூலை  மாதம் 16 ம் நாள் , 2009

டி கே பட்டம்மாள்  அவர்களின் இயற்பெயர் அலமேலு.  இவர் காஞ்சிபுரம் அருகில் தாமல் என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தை கிருஷ்ணசுவாமி தீட்சிதர், தாய் காந்திமதி (ராஜம்மாள்). இவரின் தாயாரும் சிறந்த பாடகி. அக்காலத்தில் பெண்கள் பொது மேடைகளில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  முன்னிலையில் பாடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் அந்த மரபுகளை பின்னுக்கு தள்ளி 4 வயதிலேயே  பாடத் தொடங்கினார். இவரின் உடன்பிறந்த 3 சகோதரர்களும் பாடகர்கள். 

கர்நாடக இசையை கற்கவில்லை என்றாலும், தனது தந்தை கற்று கொடுத்த  பக்திப் பாடல்கள் மற்றும் கச்சேரி இசைகளை கேட்டே ஞானத்தை வளர்த்துக் கொண்டார்.  8ம் வயதில் சி.சுப்ரமணியம் பிள்ளை அவர்கள் நடத்திய போட்டியில் தியாகராஜரின்  ரக்ஷா பெட்டரே பாடலை பாடி பரிசுகளை வென்றார் . தனது 10வயதில் வானொலியில் முதன்முறையாக  பாடினார். அப்போதிருந்து டி கே பட்டம்மாள் புகழ் பெற தொடங்கினார்.

தனது முதல் கச்சேரியை எழும்பூர் மகளிர் மன்றத்தில் அரங்கேற்றம் செய்தார். மஹாகவி பாரதியாரின் பாடல்களை  கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடினார். 1939ல் இவருக்கு திருமணம் நடந்தேறியது. இவரின் கணவர் பெரியார் ஈஸ்வரன். 

கச்சேரிகளில் ராகம் தானம் பல்லவி முதன் முதலாய் பாடிய பெண் என்ற பெருமை இவரையே சாரும். இவருடன் எம்.எஸ் சுப்புலட்சுமி மற்றும் எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோரும்  சேர்ந்து  ஆண்கள் மட்டுமே கோலோச்சிய அக்காலத்தில் "பெண் முமூர்த்திகள்" என பெருமை பெற்றனர்.

திரைப்படத்துறையில் பாபநாசம் சிவன் அவர்களால் பாட அறிமுகப்படுத்தப் பட்டார். இருந்தாலும் இவர் பக்தி மற்றும் தேச பக்தி பாடல்களை பாடுவதிலேயே கவனம் செலுத்தினார்.  1947ல் நாம் இருவர் திரைப்படத்தில் இவர் பாடிய வெற்றி எட்டு திக்கும்  மற்றும் ஆடுவோமே பள்ளு பாடுவோமே பாடல்கள் நாற்றுப்பற்று பாடல்களாக புகழ்பெற்றன.

இவர் 2009 ஜூலை 16ல் இயற்கை எய்தினார். பாடகி  நித்யஸ்ரீ மகாதேவன் இவரின் பெயர்த்தி ஆவார்.